நாட்றம்பள்ளி அருகே கல் குவாரிகளால் பாதிப்பு: மக்கள் மனு

நாட்றம்பள்ளி அருகே கல் குவாரிகளில் ஏற்படும் வெடிசத்தத்தால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்!கல் குவாரிகளை மூட மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2024-03-04 16:31 GMT

செய்தியாளர்களை சந்தித்த நிர்வாகிகள்

 திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்ல பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சுண்ணாம்புக் குட்டை பகுதியில் சுமார் 10 வருடங்களாக கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றது இரவு நேரத்தில் கற்களை உடைக்க அதிக சக்தி வாய்ந்த வெடிப் பொருட்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

என்றும் வெடி சத்தத்தால் கல்குவாரி அருகில் உள்ள சுண்ணாம்பு குட்டை அப்பகுதி மக்கள் புகை மூட்டத்தால் மூச்சுத்திறனல் ஏற்பட்டு நோய் தொற்றுக்கு ஆளாகி குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறதாகவும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டுமுன் வைக்கின்றனர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல் குவாரிஏலம் விடுவதை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி கல் குவாரிகளை மூட வேண்டும்.

இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பாதிப்பு உள்ளாகி வருகின்றனர் என்று இன்று மாவட்ட ஆட்சியரிடம் ஊர் பொதுமக்கள் சார்பில் மனு கொடுத்து சென்றனர் எண்பது குறிப்பிட தக்கது

Tags:    

Similar News