அரசு பேருந்து சிறைப்பிடிப்பு

திருக்கோவிலுார் அருகே பெரியனுார் கிராமத்திற்கு பஸ் வசதி கேட்டு கிராம மக்கள் டவுன் பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-06 08:29 GMT

 திருக்கோவிலுார் அருகே பெரியனுார் கிராமத்திற்கு பஸ் வசதி கேட்டு கிராம மக்கள் டவுன் பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்கோவிலுார் அருகே பெரியனுார் கிராமத்திற்கு பஸ் வசதி கேட்டு கிராம மக்கள் டவுன் பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்கோவிலுார் அரசு டவுன் பஸ் தடம் எண் 20டி திருக்கோவிலுாரில் இருந்து காட்டுப்பையூர் வரை பெரியானுார் வழியாக சென்று வருகிறது. சில தினங்களாக இந்த பஸ் பெரியானுார் செல்வதில்லை. சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி மாற்று வழியில் செல்வதால் கிராம மக்கள் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

நேற்று காலை 7:45 மணியளவில் கட்சிக்குப்பம் கிராமத்திற்கு வந்த பஸ்சை, பெரியானுார் கிராம மக்கள் மறித்து சிறை பிடித்து, தங்கள் கிராமம் வழியாக செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்த திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, பஸ்சை 9:00 மணியளவில் விடுவித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News