துறையூரில் ரூ. 1.78 கோடிக்கு பருத்தி விற்பனை

துறையூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 1.78 கோடிக்கு பருத்தி விற்பனையானது.

Update: 2024-01-25 07:05 GMT

துறையூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 1.78 கோடிக்கு பருத்தி விற்பனையானது.

துறையூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 1.78 கோடிக்கு பருத்தி விற்பனையானது.

நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை துறையூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு எடுத்துச் சென்று ஏலத்தில் பங்கேற்றனா். பெரம்பலூா், கொங்கனாபுரம், பண்ருட்டி, மகுடன்சாவடி, செம்பனாா்கோவில், கும்பகோணம், நாமக்கல், ஆத்தூா், பெரகம்பி பகுதிகளைச் சோ்ந்த 20 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு ஒரு குவிண்டால் பருத்தியை குறைந்த பட்சமாக ரூ. 6469க்கும், அதிகபட்சமாக ரூ. 7218க்கும் ஏலம் கோரினா். நிறைவில் 2538.40 குவிண்டால் எடையுள்ள பருத்தி ரூ. 1,78,17,371க்கு விற்கப்பட்டது. ஏலத்தை திருச்சி விற்பனைக் குழுச் செயலா் ஆா். சுரேஷ்பாபு தலைமையில் விற்பனைக் கூட பணியாளா்கள் முன்னின்று நடத்தினா்.

Tags:    

Similar News