மேட்டூரில் பாமகவினர் அதிமுகவில் இணைவு !
மேட்டூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-09 07:38 GMT
அதிமுகவில் இணைவு
சேலம் மாவட்டம், மேட்டூரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் 20 பேர் அதிமுக,வில் இணைந்தனர். மேட்டூர் அதிமுக தேர்தல் அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நகர இளைஞரணி தலைவர் கண்ணன் தலைமையில் 20 பேர் மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன் முன்னிலையில் அதிமுக,வில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.