பழனியில் பணம் கொடுக்கவில்லை எனில் காலணிக்கு இடமில்லை
பழனியில் கட்டணமில்லா காலணி பாதுகாப்பு நிலையத்தில் பணிபுரியும் பெண் காலணி வைக்க வரும் பக்தர்களிடம் பணம் கேட்பதும், பணம் கொடுக்கவில்லை என்றால் காலணிகளை வைக்க இடமில்லை, டோக்கன் கிடையாது என்று கூறினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-06 15:37 GMT
பழனி கோயில்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் வின்ச் ஸ்டேஷன் அருகே உள்ள கட்டணமில்லா காலணி பாதுகாப்பு நிலையத்தில் பணிபுரியும் பெண் காலணி வைக்க வரும் பக்தர்களிடம் பணம் கேட்பதும், பணம் கொடுக்கவில்லை என்றால் காலணிகளை வைக்க இடமில்லை,
டோக்கன் கிடையாது இதை யாரிடம் வேண்டுமானாலும் கூறிக்கொள் என்று அலட்சியமாக பதில் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.