இராமநாதபுரத்தில் அதிமுக தொகுதி தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக தலைமை தேர்தல் அலுவலகத்தினை நாடாளுமன்ற அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் திறந்து வைத்தனர்

Update: 2024-03-24 15:38 GMT

அலுவலகம் திறப்பு 

இராமநாதபுரம் நாடாளுமன்ற தலைமை தேர்தல் அலுவலகத்தினை இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் திரு. RB .உதயகுமார் , M.L.A., அவர்கள் கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர், திரு.K.T.ராஜேந்திரபாலாஜி அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்,

முன்னாள் அமைச்சர், திரு.அ.அன்வர்ராஜா, Ex. M.P., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர், திரு. MA முனியசாமி அவர்கள் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் திருமதி கீர்த்திகா முனியசாமி அவர்கள் கழக மகளிர் அணி இணைச் செயலாளர், டாக்டர் M.மணிகண்டன் அவர்கள் கழக மருத்துவ அணி துணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர், திரு. R.K. ரவிச்சந்திரன் அவர்கள் விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக தலைமை தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தனர். உடன் கழக மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய கழகச் செயலாளர்கள், நகர் கழக செயலாளர்கள், பேரூர் கழகச் செயலாளர்கள், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், வார்டு கழகச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்துக் கொடுத்தனர்.

Tags:    

Similar News