நத்தத்தில் பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பாஜக தேர்தல் அலுவலகம் துவக்கப்பட்டது.;

Update: 2024-03-08 06:51 GMT

திறப்பு விழா 

 திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட நத்தம் சட்டமன்றத் தொகுதி பாஜக தேர்தல் அலுவலக திறப்பு விழாவிற்கு  மாவட்ட பொதுச் செயலாளர், சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் சொக்கர் தலைமை தாங்கினார். மதுரை பெருங்கோட்ட அமைப்புச் செயலாளர் சுப.நாகராஜன் , திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவரும் பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் தனபாலன் ஆகியோர்  அலுவலகத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பார்வையாளர் ஏ ஆர் மகாலட்சுமி , நத்தம் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் போஸ் ஒன்றிய தலைவர்கள் சேகர், மணிகண்டன், நிறைவாக நத்தம் வடக்கு ஒன்றிய தலைவர் அகில் நன்றி உரையாற்றினார்.
Tags:    

Similar News