காஞ்சிபுரத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிழற்குடை திறப்பு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிழற்குடை திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2024-02-07 06:02 GMT


காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நியர் குடை திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.


காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது தாலுகா அலுவலக வளாகம். இப்பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் ஆண்கள் , பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், தீயணைப்பு நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், நீதிமன்ற வளாகம், தபால் நிலையம், இ சேவை மையம் என பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் முக்கிய இடமாக திகழும் இந்த பகுதியில் பேருந்து நிழற்குடை சிதலமடைந்து நிலையில் , நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்படுவதாக எம்எல்ஏ எழிலரசனிடம் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் நவீன நிழற்குடை அமைக்க திட்டமிட்டு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது.

மேலும் இவ்வளாகத்தில் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் உள்ள நிலையில் எந்த ஒரு ஏடிஎம் மையமும் இல்லை என்பதும், பொதுமக்கள் இயற்கை உபாதைகளுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டது தவிர்க்க இந்த நவீன பேருந்து நிழற்குடையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று இதனை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் திறந்து வைத்தார். மேலை நாடுகளில் உள்ளது போல் கண்ணாடி அறையுடன் கூடிய நிழற்குடை காஞ்சி மக்களுக்கு புதியதாகவும், கோடை மற்றும் தூசுகளில் இருந்து காத்துக் கொள்ளும் வகையில் கண்ணாடி பொருத்தப்பட்டு விசாலமான நிழற்குடை அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்ட பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் இதனை ஏற்படுத்தித் தந்த சட்டமன்ற உறுப்பினருக்கு பாராட்டு தெரிவித்தும், திறப்பு விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி அவர்களுடன் தன் மகிழ்ச்சியை சட்டமன்ற உறுப்பினர் கொண்டாடி மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், திமுக நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், பகுதி கழக செயலாளர்கள் திலகர், சந்துரு, தசரதன், வெங்கடேசன், மாமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News