அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
குமரமங்கலம் பேருந்து நிறுத்த பகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஆங்காங்கே அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் நீர் மோர் பந்தலை பிறந்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கி தாகத்தை தனித்து வருகிறார்கள் இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் எலச்சி பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிமுக கட்சியின் சார்பில் ஒன்றிய செயலாளர் சக்திவேல் ஏற்பாட்டின் படி குமரமங்கலம் பேருந்து நிறுத்த பகுதியில் நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் தங்கமணி ரிப்பன் வெட்டி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு தர்பூசணி நீர்மோர் குளிர்ச்சியான தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டன இந்த நிகழ்ச்சியில் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர், நாமக்கல் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர்,திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்