கள்ளக்குறிச்சி மண்டலத்தில் கூட்டுறவு வார விழா துவக்கம்

Update: 2023-11-15 06:27 GMT

கூட்டுறவு வார விழா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில், 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆண்டுதோறும் நவ., மாதம் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது. கூட்டுறவு வார விழாவையொட்டி நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கம்.மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு கூட்டுறவுதுறை தொடர்பான பேச்சு, கட்டுரை, வினாடி-வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.அதன்படி, கள்ளக்குறிச்சியில் 70வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நேற்று துவங்கியது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மீனா அருள் தலைமை தாங்கி, கூட்டுறவு கொடியினை ஏற்றி வைத்தார். சரக துணைபதிவாளர்கள் சுகுந்தலதா, சுரேஷ், மணிமேகலை, கீர்த்தனா,கூட்டுறவு சார் பதிவாளர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News