விருதுநகரில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு

திமுக கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் சிந்தாமல், சிதறாமல் அனைத்து வாக்குகளும் கிடைத்து காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை வெற்றியடைய செய்ய வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-01 01:18 GMT
இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆதரவாக பாராளுமன்ற அலுவலகம் திறப்பு

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தேர்தல் கட்சி அலுவலகத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே .கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தேர்தல் கட்சி அலுவலகத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சி முக்கிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் கலந்துகொண்டு தேர்தல் பிரச்சார வியூகங்கள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அமைச்ச கே .கே .எஸ் எஸ். ஆர் .ராமச்சந்திரன் கூறியதாவது, தேர்தல் கட்சி அலுவலகம் திறப்பு விழாவுக்கு எப்படி ஆர்வத்துடன் ‌ வந்திருக்கிறீர்களோ அதேபோல தேர்தல் பணியையும் ஆர்வத்துடன் செய்ய வேண்டும். மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி அடைய . கூட்டணி கட்சி ‌ நிர்வாகிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டால் சிதறி கிடக்கும் ‌ வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் ‌ கிடைக்கும். காங்கிரஸ் கட்சியினர் நாங்கள் தான் பெரிய கட்சி என்றும் திமுகவினர் நாங்கள் தான் பெரிய கட்சியினர் என்று ஆளாளுக்கு நினைத்துக் கொண்டிருந்தால் வாக்குகள் நிச்சயமாக சிதறும்.

இதனால் தோழமைக் கட்சிகளுடன் அரவணைத்து தேர்தல் பணியை மேற்கொள்ள வேண்டும். கூட்டணி கட்சியினர் எல்லோரும் சகோதர சகோதரிகளாக வருகின்ற 17 நாட்கள் தீவிரமாக ‌ தேர்தல் பணிகளில் ஈடுபட்டால் தான் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40க்கும் 40 வெற்றி பெறுவது உறுதி. விருதுநகர் நாடாளுமன்றத்தில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

மாணிக்கம் தாகூர்க்கு அனைத்து மக்களிடத்திலும் நற்பெயர் உள்ளது. மாணிக்கம்தாகூர் தகவல் வெற்றி பெறுவது உறுதி. எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது என்பதை உணர்ந்து கொண்டு ‌ தேர்தல் பணிகளை ‌ தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News