நியாய விலை கடை திறப்பு விழா - எம்பி எம்எல்ஏ பங்கேற்பு !

சூனாம்பேடு கிராமத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-14 06:31 GMT
நியாய விலை கடை திறப்பு  எம்பி எம்எல்ஏ பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் சூனாம்பேடு கிராமத்தில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றிய பெருந்தலைவர் ஏழுமலை, கழக செயலாளர் சிற்றரசு ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தும் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணியை தொடங்கி வைத்தனர்.. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில்மாவட்ட கவுன்சிலர் டைகர்குணா, ஒன்றிய கவுன்சிலர் பாரதி காண்டீபன், ஒன்றிய துணை செயலாளர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News