கல்வித் திறனை உயர்த்தும் நவீன ஆய்வகம் திறப்பு விழா !
பண்ணை பார்மசி கல்லுாரியின் ஆராய்ச்சி, கல்வித் திறனை உயர்த்தும் நவீன ஆய்வகத்தை எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலை துணைவேந்தர் டாக்டர் நாராயணசாமி நேற்று துவங்கி வைத்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-22 06:20 GMT
நவீன ஆய்வகம்
பண்ணை பார்மசி கல்லுாரியின் ஆராய்ச்சி, கல்வித் திறனை உயர்த்தும் நவீன ஆய்வகத்தை எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலை. துணைவேந்தர் டாக்டர் நாராயணசாமி நேற்று துவங்கி வைத்தார். பண்ணை குழும நிறுவனங்களின் தலைவர் கார்த்திகேயன், கல்லுாரியின் முதல்வர் கணேசன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லுாரி ஆண்டு விழா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ், துணைவேந்தர் நாராயணசாமி வழங்கினார்.