நாட்டு நலப்பணி திட்ட தொடக்க விழா

சேலம் அன்னபூரணா என்ஜினீயரிங் கல்லூரி நடந்த நாட்டு நலப்பணி திட்ட தொடக்க விழாவில் 100கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தன்னார்வ பணிகளை மேற்கொண்டனர்.

Update: 2024-01-11 13:02 GMT

 நாட்டு நலப்பணி திட்டம்  துவக்கம் 

சேலம் அன்னபூரணா என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய நலப்பணி திட்டத்தின் 2023-24-ம் ஆண்டுக்கான தொடக்க விழா நடந்தது. சிவில் என்ஜினீயரிங் துறைத்தலைவர் காந்திமதி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சில்பா வரவேற்றார். இதில், சோனா தொழில்நுட்ப கல்லூரி தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியர் அய்யனார் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர், மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித்திட்டம் அமைப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் குறிக்கோள்களை பற்றி பேசினார். தொடர்ந்து கல்லூரி முதல்வர் அன்புச்செழியன் கலந்து கொண்டு பேசினார். விழாவில், 100-க்கும் மேற்பட்ட முதலாமாண்டு மாணவ, மாணவிகள், தன்னார்வ தொண்டு பணியில் ஈடுபட்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் நந்தகோபால் நன்றி கூறினார். ஏற்பாடுகளை சிவில் என்ஜினீயரிங் துறையை சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News