காளையார் கோவிலில் நீர் மோர் பந்தல் திறப்பு

காளையார்கோவிலில் நீர், மோர் பந்தலை அமைச்சர் பெரிய கருப்பன் திறந்து வைத்தார்.

Update: 2024-05-10 09:52 GMT

காளையார்கோவிலில் நீர், மோர் பந்தலை அமைச்சர் பெரிய கருப்பன் திறந்து வைத்தார்.


தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தினால் பொதுமக்கள் கடும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர். இந்த சூழ்நிலையில் தமிழக முதல்வர் ஆங்காங்கே தண்ணீர் பந்தலை திறக்க அறிவுறுத்தியுள்ளார். இதனை கருத்தில் கொண்டு சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான ஆரோக்கியசாமி ஏற்பாட்டில் பேருந்து நிலையம் அருகே நீர், மோர் வழங்கும் தண்ணீர் பந்தலை கூட்டுறவுத் துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான பெரிய கருப்பன் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் உரையாற்றுகையில் தமிழகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை, தூத்துக்குடி நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்கள் மழை சேதத்தினால் பாதிக்கப்பட்டது. முதல்வர் மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்டபோது மோடி தலைமையிலான அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியது. ஆனால் நமது முதல்வர் உடனடியாக களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினார். இந்த வகையில் தமிழகத்தில் கோடை வெயிலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி அவர்களுக்கு தாகத்தை தீர்க்க குடையாக இருந்து இந்த வெயில் காலத்தில் திமுகவினரை அறிவுறுத்தி செயல்பட்டு வருகிறார் என பேசினார்.

Tags:    

Similar News