புதிய கூட்டுறவு நியாய விலை கடை திறப்பு விழா
செய்யாறு அருகே வெள்ள குளத்தில் புதிய கூட்டுறவு நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் மத்திய ஒன்றியம் வெள்ள குளத்தில் ரூபாய் 9.17 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடையினை செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனரும் மாவட்ட செயலாளருமான எம்.எஸ்.தரணி வேந்தன்,எம்எல்ஏ ஒ.ஜோதி ஆகியோர் திறந்து வைத்தனர். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார்.தலைமை செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
மத்திய ஒன்றிய கழக செயலாளர் ஜெ.சி. கே.சீனிவாசன் வரவேற்றார். தலைமை செயற்குழுஉறுப்பினர் வேல்முருகன், அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் சங்கர், தினகரன், ரவிக்குமார், ஞானவேல்,ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேஸ்வரி சிட்டிபாபு,அம்பிகாபதி மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராம் ரவி,உள்ளிட்ட திமுக நிர்வாகிகள்,கூட்டுறவு செயலர்,ஊராட்சி மன்ற தலைவர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.