பல்லடம் நகராட்சி கமிஷனர் பதவியேற்பு
பல்லடம் நகராட்சியில் புதிய கமிஷனராக பானுமதி பதவி ஏற்றார்.;
Update: 2024-03-03 04:43 GMT
பல்லடம் நகராட்சியில் புதிய கமிஷனராக பானுமதி பதவி ஏற்றார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த முத்துசாமி பணியிடமாறுதல் பெற்றுச்சென்ற நிலையில் விருத்தாச்சலம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த பானுமதி திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் பானுமதி தனது பொறுப்பினை ஏற்றுக்கொண்டார் இவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.