பங்குனி உத்திர திருவிழா

குயவன்குடி சுப்பையா முருகன் கோவிலில் காப்பு கட்டுடன் பங்குனி உத்திர திருவிழா துவங்கியது.

Update: 2024-03-15 11:52 GMT

ராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பையா சாது என்னும் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் வருகின்ற 24ஆம் தேதி பங்குனி உத்திர பெருவிழா நடைபெறுவதையும் முன்னிட்டு காப்பு கட்டு விழாவுடன் பங்குனி உத்திரம் துவங்கியது இதில் ஒன்பது நாட்களும் ஆன்மீக பக்தர்களின் சொற்பொழிவு புராணம் முருகனின் அருள் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற உள்ளது ஏராளமான ஆன்மீக பக்தர்கள் காப்பு கட்டினர் ஒன்பது நாட்களும் அருள் பாலிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் பூ வளர்க்கும் நிகழ்வு நடைபெற்று அதிகாலை 3 மணி அளவில் பூவில் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.

இதில் குயவன் குடி, வாலாந்தரவை வழுதூர் தெற்கு காட்டூர், உடைச்சியார் வலசை சாத்தான்குளம் முனியன் வலசை கீரிப்பூர் வலசை சடையன் வலசை சாத்தான்குளம் உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமப்புற பொதுமக்கள் பங்குனி உத்திர பெருவிழாவில் கலந்து கொள்வார்கள், தமிழகத்தில் பங்குனி உத்திர பெருவிழாவில் அதிக அளவு பூ வளர்த்து அதில் ஆன்மீக பக்தர்கள் இறங்கும் திரு தளங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடதக்கது

Tags:    

Similar News