முதியோர் காப்பகத்தில் பொது தியான மையம் திறப்பு விழா
பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் ஆதரவற்ற முதியோர் இலவச காப்பகத்தில் பொது தியான மையம் திறப்பு விழா நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-29 16:32 GMT
தியானத்தில் கலந்து கொண்டவர்கள்
சேலம் மரவனேரியில் உள்ள ஆதரவற்ற முதியோர் இலவச காப்பகமான பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தில் பொது தியான மையம் திறப்பு விழா நடந்தது. இதனை, கோவை தலைமை பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் நிறுவனரும், அமைதி தூதருமான குருஜி சிவாத்மா திறந்து வைத்தார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக சேலம் மாவட்ட வணிகர் சங்க தலைவர் ராசி சரவணன், மெட்ரோபாலிஸ் அரிமா சங்க தலைவர் கே.சி.டார்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் முதியவர்களை மகிழ்விக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மதியம் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள், நன்கொடையாளர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.