தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க கட்டிடம் திறப்பு

மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-10-28 09:39 GMT

புதிய கட்டிடம் திறப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேனி மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் உள்ள வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க கட்டிடத்தை இன்று மாநில தலைவர் கண்ணன் திறந்து வைத்தார். தேனி நகர் பகுதியில் அமைந்துள்ள NRT சாலையில் இருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்ட தொழிலாளர் பொறியாளர் ஜக்கிய சங்க கட்டிடத்தை மாநிலத் தலைவர் கண்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மகளிர் அணி செயலாளர் கண்மணி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக சங்க தலைவர் செயலாளர் பொருளாளர் உறுப்பினர் அனைவரையும் பெரியகுளம் சாலையில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்தனர் அங்கு இருந்த ஊழியர் பெண்கள் மலர் தூவி அவர்களை வரவேற்றனர். இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் சங்க செயல்வீர் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேனி வட்டார தலைவர் முனியாண்டி மற்றும் பாலமுருகன் தேனி கோட்டம் ரவீந்திரன் கோட்டத் தலைவர் பெரியகுளம் கோட்டத் தலைவர் முகமது நஷிர் உசேன் கோட்டத் தலைவர் கோட்டச் செயலாளர் ரங்கராஜ் கோட்டை இணைச்செயலாளர் பழனி முருகன் சின்னமனூர் கோட்டம் கோட்டத் தலைவர் உதயகுமார் கோட்டை இணைச்செயலாளர் ஈஸ்வரன் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News