மதிப்பு கூட்டு மையம் கட்டிடம் திறப்பு விழா
தென்காசி மாவட்டம்,கீழப்புலியூரில் வேளாண் மதிப்புகூட்டு மையம் திறப்பு விழாவில் ஏறாளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.;
தென்காசி மாவட்டம், கீழப்புலியூரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பில் தமிழ்நாடு நீர் பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் ரூபாய் 40 லட்சம் செலவில் மதிப்பு கூட்டு மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சிற்றாறு வடிகால் பாசன பகுதிக்கு உட்பட்ட விவசாயிகளை ஒன்று சேர்த்து சிற்றாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டு அந்த நிறுவனத்தில் 700 விவசாயிகள் பங்குதாரர் களாக உள்ளனர்.
உலக வங்கி நிதி மற்றும் தமிழக அரசின் ரூ. 30 லட்சம் மானியத்துடன் சேர்த்து ரூ. 40 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த வேளாண் மதிப்பு கூட்டு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவரின் வேளாண்மை பிரிவு நேர்முக உதவியாளர் கனகம்மாள் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வேளாண் வணிகத்துறை இணை இயக்குநர் சுப்பையா, தென்பொதிகை உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் ஜாகிர் உசேன், திமுக விவசாய தொழிலாளர் அணி தலைவர் பாலாமணி, மீனவர் அணி அமைப்பாளர் முகமது இஸ்மாயில் சிற்றாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் கணபதி உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டனர்.