தண்ணீர் பந்தல் திறப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தலை அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு திறந்து வைத்தார்.;

Update: 2024-05-02 16:33 GMT

தண்ணீர் பந்தல் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவள்ளூர் ஊராட்சியில் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைச் செயலாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு மோர், இளநீர், தர்பூசணி போன்றவற்றை வழங்கினார்.
Tags:    

Similar News