பரமத்திவேலூரில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
பரமத்திவேலூரில் தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால் வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களை காக்கும் வகையில் பல்வேறு அரசியல் கட்சியினர் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் துவங்கி பொதுமக்களுக்கு குடிநீர், மோர், பழங்கள், இளநீர், குளிர்பானங்கள் ஆகியவற்றை பகல் பொழுதில் வழங்கி வருகிறார்கள். இதில் பரமத்தி வேலூரில் தி.மு.க சார்பில் பரமத்தி வேலூர் பேருந்து நிலையம் மற்றும் மோகனூர் பிரிவு சாலையில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இதில் தண்ணீர்,மசாலா மோர், தர்பூசணி, பலாச்சுளை, மாங்காய், வெள்ளரிக்காய் , ஆகியவற்றையும் பொது மக்களுக்கும் பேருந்துக்கு வந்து செல்லும் பயணிகள் உள்ளிட்ட பலருக்கு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் வேலூர் பேரூர் கழகச் செயலாளர் முருகன், மாணவரணி அமைப்பாளர் மகிழ் பிரபாகரன், பரமத்தி ஒன்றிய செயலாளர் தன்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்பூக்கடை சுந்தர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிபி சாமிநாதன், அவைத் தலைவர் மதியழகன், அரசு வழக்கறிஞர்கள் செல்லப்பா செந்தில், பாலகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் லட்சுமி முரளி மற்றும் கவுன்சிலர்கள், மகளிர் அமைப்பினர், கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.