தொடர் மழையால் 2 கடைகளின் சுவர் இடிந்து விழுந்து சேதம்

வருவாய் துறையினர் விசாரணை;

Update: 2023-11-28 15:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் முகமது பாரூக். இவர் ஒத்தக்கடை பேருந்து நிறுத்தம் அருகே டீக்கடை நடத்தி வருகிறார். அதையொட்டி ஷேக் அப்துல்லாஹ் உணவகம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக தேவகோட்டை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த மழையில் டீக்கடை மற்றும் உணவகம் ஆகியவற்றின் சுவர்கள் இடிந்துள்ளன. கடையில் யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. ஆனால் கடைகளில் இருந்த பல்லாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. இதையடுத்து சேதமடைந்த கடைகளை வருவாய்த்துறையினர் பார்வையிட்டு வருகின்றனர்

Similar News