மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு !
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 73 கன அடியாக அதிகரிப்பு.
By : King 24x7 Angel
Update: 2024-04-08 04:28 GMT
சேலம் மாவட்டம்,மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 கன அடியிலிருந்து 73 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைத்துக் கொண்டு வந்தது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 50 கன அடியாக இருந்த நிலையில் இன்று 73 கன அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை காட்டிலும் குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் குறைந்து வருகிறது . இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் நீர்மட்டம் 57.86 அடியாகவும், நீர் இருப்பு 23.11 டி.எம்.சி.யாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 2,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.