கொசுத் தொல்லை அதிகரிப்பு; பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலையில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

Update: 2023-12-12 16:28 GMT

திருவண்ணாமலையில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட தெருக்களில் கொசு தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதியில் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18வார்டுகளிலும் கொசு தொல்லை அதிகரித்துள்ளதாக செங்கம் பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இரவு நேரம் மட்டும் அல்லாமல் காலை மற்றும் பகல் நேரங்களிலும் கொசுத்தொல்லை உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் டெங்கு, மலேரியா போன்ற விஷ காய்ச்சல்கள் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. பள்ளி மாணவர்கள், குழந்தைகள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கொசு உற்பத்தி அதிகரிப்பதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து பெயரளவிற்கு கொசு மருந்து அடிக்காமல் முறையாக பாரபட்சமின்றி அனைத்து வார்டுகளிலும் கால்வாய்கள், குப்பைகள் அமைந்துள்ள இடங்களில் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என செங்கம் பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News