காஞ்சிபுரம் மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 10க்கும் மேற்பட்ட நபர்கள் காணாமல் போனதாக காவல்துறை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞான வளர்ச்சிகள் அதிகரித்துள்ள நிலையில் அதன் பயன்கள் ஓரு புறம் இருக்க , அதனால் ஏற்படும் தீமைகளும் சரிசமமாக உள்ளது. சமீப காலமாகவே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களால் குடும்ப சச்சரவுகளும் குற்ற நிகழ்வுகளும் அதிகரித்து வருவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் அதில் வரும் வசனங்களும் இக்கால குழந்தைகளுக்கு பெருத்த ஆபத்தை விளைவிப்பதாகவும் இதனை தொடர்ந்து ஒளிபரப்பு ப்பு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பருவ மாற்ற காலங்களில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் , கல்வி வேலை வாய்ப்பு பெறுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் , தீய பழக்கங்கள் மற்றும் இளம் பருவ காதலில் ஈடுபட வேண்டாம் எனவும் பலர் அறிவுறுத்தி வருகின்றனர். இது போன்ற அறிவுரைகளை ஏற்க தற்போதைய பெண்கள் மற்றும் மாணவர்கள் இதை கடினமாக ஏற்றுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவது வழக்கமாக உள்ளது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் காணாமல் போய் உள்ளதாக அவரது பெற்றோர்கள் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் மனு அளித்துள்ளதாக காவல்துறை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக 6 பெண்கள் இருபத்தைந்து வயதுக்கு கீழ் என்பதும், மாணவர்கள் மூன்று நபர்களும் 25 வயதுக்கு கீழ் என்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது. காணாமல்போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இதுகுறித்து மிகுந்த கவலை அடைந்துள்ளதும், தவறான பாதைகளில் சென்றுள்ளனர் என்றும் அச்சத்துடனே நாட்களை கழித்து வருகின்றனர்.