போலி பொருட்களின் விற்பனை அதிகரிப்பு
பழநி மலை கிரிவீதியில் போலி பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
Update: 2023-12-19 05:17 GMT
பழநி மலை கிரிவீதியில் போலி பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் பாதிப்படைகின்றனர்.பழநி முருகன் கோயிலுக்கு வெளிமாவட்ட, வெளிமாநில ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. கிரி வீதி, சன்னதி வீதி, அய்யம்புள்ளி ரோடு, பூங்கா ரோடு பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளது. சன்னிதி வீதி, கிரி வீதியின் நடுவில் வியாபாரிகள் தரையில் அமர்ந்து தட்டுகளில் பொருட்களை வைத்து வியாபாரம் செய்கின்றனர். பேன்சி, விளையாட்டு பொம்மைகள், துணி,பூஜை பொருட்கள், பொம்மைகள், சிற்றுண்டி விற்க ஏராளமான தள்ளுவண்டி கடைகள் அமைத்துள்ளனர். இதில் பக்தர்கள் பலவகையில் ஏமாற்றப்படுகின்றனர்.