முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் வரத்து அதிகரிப்பு

முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று எள் வரத்து அதிகரிப்பு. ஒரு கிலோ எள் ரூ.146 தாண்டி விற்பனை செய்யப்பட்டது.

Update: 2024-04-07 10:29 GMT

கோப்பு படம் 

திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற் பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருட்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலங்களில் முத்தூர் நகர மற்றும் சுற்றுவட் டார கிராம பகுதி விவசாயிகள் மற்றும் ஈரோடு மாவட்டம் கொல்லன்கோவில்

, சிவகிரி பேரூராட்சி பகுதிகள், அஞ்சூர் ஊராட்சி மற்றும் கரூர் மாவட்டம் அஞ்சூர், கார்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலர் நேரில் கலந்து கொண்டு தங்களது வேளாண் விளை பொருட்களை விற்று பலன் அடைந்து வருகின்றனர்.

இதன்படி நேற்று காலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 56 எள் மூட் டைகளை கொண்டு வந்திருந்தனர். இதில் 1 கிலோ எள் அதிகபட்சமாக ரூ.146.22-க் கும், குறைந்தபட்சமாக ரூ.130.59-க்கும் ஏலம் விடப்பட்டது. இவைகளின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சத்து 77 ஆயிரத்து 799 ஆகும்.மேலும் விவசாயிகள் 6 ஆயிரத்து 890 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதனை தொடர்ந்து டெண்டர் முறையில் ஏலம் நடைபெற்றது. இதில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.28.65-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.65- க்கும் ஏலம் விடப்பட்டது. 92 தேங்காய் பருப்பு மூட் டைகள் ஏலம் விடப்பட்டதில் ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.93.10-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.20-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 45 எள் மூட்டைகளும், 906 தேங் காய்களும், 26 தேங்காய் பருப்பு மூட்டைகளும் கூடு தலாக கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் எள் கிலோவிற்கு ரூ.8.13 கூடுதலாகவும், தேங் காய் கிலோவிற்கு 45 பைசா குறைவாகவும், தேங் காய் பருப்பு கிலோவிற்கு ரூ.3.90 கூடுதலாகவும் விவ சாயிகளுக்கு கிடைத்தது. 

மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங் காய், தேங்காய் பருப்பு, ஏள் 10 டன் அளவில் மொத்தம் 9 லட்சத்து 19 ஆயிரத்து 512-க்கு வேளாண் விளை பொருட்கள் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலங்களில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக் கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். இந்த தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News