தேங்காப்பட்டணம்  மீன்பிடித் துறைமுகத்தில் சுறாமீன் வரத்து அதிகரிப்பு

தேங்காப்பட்டணம்  மீன்பிடித் துறைமுகத்தில் சுறாமீன் வரத்து அதிகரிப்பு - மீனவர்கள் மகிழ்ச்சி 

Update: 2024-02-16 06:57 GMT
தேங்காபட்டணத்தில் சிக்கிய சுறா மீன்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் தேங்காப்பட்டணம் மீன் பிடித்து துறைமுகம் அமைந்துள்ளது. இந்த மீன்பிடி துறைமுகத்திற்குட்பட்ட பகுதியில் தூத்தூர், இனயம் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இதில் தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் இந்தியாவிலேயே ஆழ்கடல் மீன்பிடிப்பதில் வல்லவர்கள் ஆவார்கள். இவர்கள் தான் அதிக அளவில் சுறா மீன்களைப் பிடித்து வருவார்கள். இந்தியாவில் 400 வகையான சுறாக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. 22 சென்டிமீட்டர் நீளமுள்ள பிக்கி சுறா முதல் 12 மீட்டர் நீளமுள்ள திமிங்கல சுறா வரை இனங்கள் உள்ளது. இந்த சுறா மீன்கள் மருத்துவ குணம் வாய்ந்ததாகும். இதில் பால் சுறாவிலிருந்து புட்டு தயாரித்து சாப்பிடுகிறார்கள். இது மிகவும் மருத்துவ குணம் வாய்ந்ததுடன் தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த சுறா மீனின் புரதச்சத்தும் அதிகமாக உள்ளது. சுறாவிலிருந்து எடுக்கப்படும் எண்ணைக்கு உலக அளவில் கிராக்கி உள்ளதால் சுறா மீனுக்கு கிராக்கி அதிகமாக உள்ளது. தற்பொழுது தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் சுறா மீன்கள் அதிகம் பிடிபட்டு வருவதால் சுறா மீன்  விலை ஒரு கிலோ 250 வரை விற்பதால் மீனவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News