மஞ்சளார் அணையில் நீர்வரத்து உயர்வு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கோடை மழையால் மஞ்சளார் அணைக்கு நீர்வரத்து துவங்கி 313 கன அடியாக உயர்ந்துள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கோடை மழையால் மஞ்சளார் அணைக்கு நீர்வரத்து துவங்கி 313 கன அடியாக உயர்வு. கோடை மழையால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக மழைப்பொழிவு முற்றிலும் இல்லாது போனதால் கடந்த இரண்டு மாதங்களாக அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் போனது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாலமலை, பண்ணைக்காடு, பெருமாள் மலை, வடகர பாறை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கோடை மழையால் அணைக்கு நீர்வரத்து துவங்கியது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த கன மழையால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து இன்று காலை நிலவரப்படி 313 கன அடி நீர்வரத்து உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டம் 40.50 அடியில் இருந்து 2 அடி உயர்ந்து 42.50 அடியாக உயர்ந்துள்ளது.
மேலும் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தற்போதைய அணையின் நீர்மட்டம் 42.50 (57) அடியாகவும், . நீர்வரத்து - 313 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் இல்லை, அணையில் மொத்த நீர் இருப்பு 219.03 மில்லியன் கன அடியாக உள்ளது.