கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையரையற்ற வேலை நிறுத்தம்
மயிலாடுதுறையில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் தலைமை அஞ்சலகம் முன்பு ஊழியர்களின் நீண்ட நாள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்தம்
Update: 2023-12-13 05:22 GMT
கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை மற்றும் ஓய்வூதியம் உட்பட்ட பணப்பலன்களையும் வழங்கிடு, குரூப் இன்சூரன்ஸ் தொகையை ரூபாய் 5 லட்சமாக உயர்த்தி வழங்கிடு, 180 நாட்கள் வரை விடுப்பு சேமித்து வைத்து பணமாக்கும் வசதியை வழங்கிடு, எஸ் டி பி எஸ் காக பிடித்தம் செய்யப்படும் தொகையை மூன்று சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்த வேண்டும், ஓய்வு பெற்ற கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு, பென்ஷன் ரூபாய் 5000 வழங்கிடு, கிளை அஞ்சலகங்களுக்கு மடிக்கணினி, பிரிண்டர், அதிவேக இணை சேவை ,போன்றவற்றை வழங்கி சேவை தரத்தை உயர்த்திடவேண்டும் என்பது உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு ,அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில், கோட்ட தலைவர் மதியழகன் தலைமையில், டிசம்பர் 12 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து கண்டன முழக்கங்களை எழுப்பி , ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோட்ட செயலாளர் சிரஞ்சீவி நிதி, கோட்டப்பொருளாளர் பிரியதர்ஷினி உள்ளிட்ட, ஏராளமான கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.