மோடி வீழ்ச்சிக்கு இண்டியா கூட்டணி காரணம்: ரஞ்சன்
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வீழ்ச்சிக்கு தமிழகம், புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றியே காரணம் என ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி., எஸ்.டி.,பிரிவின் மாநிலத் தலைவர் ரஞ்சன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க பிரதமர் மோடி ஜூன் 20 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
மீண்டும் பிரதமரான பின் அவர் மேற்கொள்ளும் முதல் தமிழக பயணம் இது தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி 8 முறை தமிழகம் வந்தும் படுதோல்வியை சந்தித்தது பாஜக. கடந்த 10 ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு பாஜக செய்த துரோகத்துக்கு மக்கள் சரியான தண்டனையை வழங்கினார்கள் பெரும்பான்மை பலமின்றி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் மோடி தலைமையிலான,
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வீழ்ச்சிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி பெற்ற நாற்பதுக்கு நாற்பது மகத்தான வெற்றியே காரணம் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருவதாலோ, திருக்குறளை சொல்வதாலோ மக்களை ஏமாற்ற முடியாது என்பதை பிரதமர் தெரிந்து கொண்டிருப்பார்.
பேரிடர் கால இழப்பீடு முதல் வரிப்பகிர்வு வரை தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தியவர் பிரதமர் மோடி அதற்கான தக்க பாடத்தை தமிழக மக்கள் கடந்த மக்களவை தேர்தலில் புகட்டினார்கள். தற்போது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க தமிழ்நாட்டுக்கு வருகிறார்.
காங்கிரஸ் ஆட்சியிலும் ஏழைகள் ரதம், துரந்தோ ரயில்கள் தொடங்கப்பட்டன அன்றைய பிரதமர் யாரும் எந்த ரயில்களை தொடங்கவில்லை. இதற்காக பிரம்மாண்ட விழாக்களும் நடக்கவில்லை. ஆனால், ஒவ்வொரு வந்தேபாரத் ரயிலையும் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைப்பது அவரது சுய விளம்பர ஆசையையே காட்டுகிறது ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறக்கூடிய அளவுக்கு வந்தே பாரத் ரயில்களின் கட்டணம் இல்லை.
தமிழகத்தில் முதல் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தபோதே, பிரதமர் மோடியிடம் நேரடியாக இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். இவ்வளவு கட்டணம் செலுத்தி சாதாரண மக்கள் பயணிப்பது கடினம் என்று முதலமைச்சரின் கருத்தை பிரதமர் மோடி கண்டுகொள்ளவே இல்லை ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய ரயில்கள் தயாரித்து இயக்கப்படுவது வழக்கம். ஏதோ தாங்கள் மட்டுமே உருவாக்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மலிவான விளம்பரத்தைத் தேடுகிறார்,
பிரதமர் பொதுப் போக்குவரத்து என்பது சாமானிய மக்களும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், பிரதமர் தொடங்கி வைக்கும் வந்தே பாரத் வசதி படைத்தவர்களுக்கு மட்டும் தான், வாக்களிக்கும் மக்களுக்கு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது தமிழக மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டு பிராயச்சித்தம் தேட முயல்கிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டுக்கு வந்து தியானம் செய்வதன் மூலமோ,
வந்தே பாரத் ரயில்களை தொடங்குவதன் மூலமோ பிராயசித்தம் தேட முடியாது தமிழ்நாட்டு மக்களுக்கு இதுவரை செய்துள்ள அடுக்கடுக்கான துராகத்துக்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு நிதிப் பகிர்விலிருந்து வளர்ச்சித் திட்டங்கள் வரை பாரபட்சமின்றி செய்ய வேண்டும் அதைவிட்டு மலிவான விளம்பரத்துக்காக இதுபோன்ற கொடி அசைப்புகளை பிரதமர் செய்வாரேயானால்,
தமிழக மக்களும் கே பேக் மோடி என்று தொடர்ந்து கருப்புக் கொடியை காட்டத்தான் செய்வார்கள் பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு பயணத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் எஸ்சி., எஸ்.டி., பிரிவு சார்பாக கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்கிறோம்.