இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
தர்மபுரி நகராட்சி அருகே மார்க்சிஸ்ட் கம்யூயினிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷணன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
Update: 2024-04-11 05:46 GMT
தர்மபுரி நகராட்சி அருகே மார்க்சிஸ்ட் கம்யூயினிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷணன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் அளித்த பேட்டியில், கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 39 திமுக கூட்டணி வெற்றி பெற்றது. 2024 ம் ஆண்டு 18 ஆவது நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றிபெற வாய்ப்புள்ளது.தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி சில இடங்களுக்கு சென்றுள்ளார்.தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு 7 ஆவது முறையாக மோடி வந்துள்ளார்.சென்னையை சுற்றி 4 மாவட்டங்களும் தூத்துக்குடியை சுற்றி 4 மாவட்டங்களும் வெள்ளத்தால் கடிமையாக பாதிக்கப்பட்டனர். கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டனர்.வெள்ள நிவாரணமாக தமிழ்நாடு அரசு ரூ 37 ஆயிரம் கோடி கேட்டனர். கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப் படும் பொழுது பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் பார்வையிடுவது வழக்கம், ஆனால் பிரதமர் மோடி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. அதேபோல் மனிப்பூர் மாநிலத்தில் பழங்குடி மக்கள் கலவரத்தால் தாக்கப்பட்டனர். என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். உடன் மாவட்ட செயலாளர் ஏ.குமார் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து ,எஸ்.கிரைஸாமேரி ,மூத்த தலைவர் பி.இளம்பரிதி ஆகியோர் இருந்தனர்.