இந்திய ரயில்வே அறிவிப்பு

மங்களூர் - கோவை - மங்களூர் இடையே ஜூன் 8, 15, 22, 29 ஆகிய நாட்களில் இயக்க இருந்த வாராந்திர சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

Update: 2024-05-21 15:04 GMT

கோப்பு படம்

 கொச்சுவேலி - நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரயில் ஜீன் 10, 17, 24 மற்றும் ஜூலை 1 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து. சென்னை எழும்பூர் - வேளாங்கண்ணி இடையேயான வாரம் இரு முறை சிறப்பு ரயில் ஜுன் 21, 23, 28, 30 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

வேளாங்கண்ணி - சென்னை எழும்பூர் இடையேயான வாரம் இரு முறை சிறப்பு ரயில் ஜூன் 22, 24, 29 மற்றும் ஜூலை 1 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து. நெல்லை - கர்நாடகா எலஹங்க இடையேயான சிறப்பு வாராந்திர ரயில் இயக்கம். நெல்லையில் இருந்து மே 22, 29, ஜூன் 5, 12 ஆகிய நாட்களில் மாலை 3.15 மணிக்கு புறப்படுகிறது. எலஹங்க - நெல்லை இடையேயான வாராந்திர ரயில் மே 23, 30, ஜூன் 6, 13 ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது என ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News