இந்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்கம் சார்பில் நடந்த ஆர்பாட்டத்தில் 150 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.;

Update: 2024-01-31 06:39 GMT
விருதுநகர் மாவட்ட தொழிற்துறை அலுவலகம் முன்பு இந்திய தொழிற்சங்கம் சார்பாக பட்டாசு தீப்பெட்டி சங்க மாவட்ட பொதுச் செயலாளர் பாண்டியன் தலைமையில், சென்னை மழைவெள்ளத்தில் அழிந்த 70லட்சம் தொழிலாளர்களின் பதிவு ஆவணங்களை மீண்டும் பதிவு ஏற்றம் செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், சர்வர் பிரச்சனை காரணம் சொல்லி தொழிலாளர்களை அலைக்கழிக்க கூடாது மேலும் உடனடியாக தடையில்லாமல் சர்வர் வழங்கிட வேண்டும்,மாவட்டம் வாரியாக தொழிலாளர்களின் பதிவு விபரங்களை கணினியில் சேமிப்பதற்கான உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும், ஓய்வூதியம், கல்விநிதி, திருமண நிதி, விபத்து மரணநிதி, இயற்கை மரணம் உள்ளீட்ட நிதிகளை காலம் தாழ்த்தாமல் வழங்கிட வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கான வீடு கட்டும் திட்டம் முடக்கப்பட்டு இருப்பதை நடைமுறைப்படுத்திட வேண்டும், கட்டுமானம், தையல், உடல்உழைப்பு, பட்டாசு - தீப்பெட்டி, ஆட்டோ, சுமைப்பணி, விசைத்தறி, கைத்தறி, அச்சு, சலவை, வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழில்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யவும், கேட்பு நிதிகளை பெறுவதற்கும் தேவையற்ற ஆவணங்கள் கேட்பதை கைவிட்டு அதை எளிமைப்படுத்திட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு மாவட்ட தொழில்துறை அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை அளித்தனர்.
Tags:    

Similar News