அறக்காவலர் குழுவினரின் பதவி ஏற்பு நிகழ்ச்சி
நெல்லை மாவட்டம், பலவூர் நாறும்பூநாதர் கோவிலுக்கு புதியதாக அறக்காவலர் குழு நியமிக்கப்பட்டதை அடுத்து பதவியேற்பு விழா நடைபெற்றது.;
Update: 2024-02-28 14:28 GMT
பதவியேற்பு நிகழ்ச்சி
நெல்லை மாவட்டம், பலவூர் நாறும்பூநாதர் கோவிலுக்கு புதியதாக அறக்காவலர் குழு நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறங்காவலர் குழுவினர் பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று (பிப்.27) இரவு ராதாபுரம் இந்து சமய அறநிலைத்துறை சரக ஆய்வாளர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் புதிய அறக்காவலர்களாக இசக்கியப்பன், திருநாவுக்கரசு, ஐயப்பன் ஆகியோர் பதவியேற்றனர். இதில் திமுகவினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.