வாகனங்களுக்கு ஜிபிஎஸ் மற்றும் சோலார் கேமரா பொருத்தும் பணி துவக்கம்

கோவையில் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் மற்றும் சோலார் கேமரா பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-16 14:42 GMT

ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.இதையடுத்து அரசு வாகனங்கள்,ஜீப்,கார் போன்றவை தேர்தல் நடத்தும் அலுவலர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

தேர்தல் பறக்கும் படையினர்,நிலை கண்காணிப்புக் குழுவினர்,வீடியோ குழுவினர் போன்றோர் இந்த வாகனங்களை பயன்படுத்தி வாகன தணிக்கையில் ஈடுபட உள்ளனர்.

தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் இந்த வாகனங்கள் மூலம் வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.அரசு வாகனங்கள் தவிர தனியார் வாகனங்களும் வாடகைக்கு எடுக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் வாகனங்கள் எங்கெங்கு செல்கிறது என்பதை கண்காணிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார்,ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி,சோலார் கேமரா பொருத்தும் பணி தொடங்கியது.

இதேபோல் பொள்ளாச்சியிலும் தேர்தலுக்கு பயன்படும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News