நுகர்வோர் கூட்டுறவு சார்பாக பட்டாசு விற்பனை துவக்கம்
திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிட்., சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்பா.முருகேஷ், திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிட்., சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்பா.முருகேஷ், திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிட்., சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலை துராபலி தெருவில் உள்ள பட்டாசு விற்பனை நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் இன்று திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
2023 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட பொது மக்களின் நலன் கருதி திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் சார்பாக பட்டாசு ரூ.30 இலட்சம் அளவிற்கு கொள்முதல் செய்யப்பட்டு நேற்று முதல் திருவண்ணாமலை நகரம் புகழ் திரையரங்கம் எதிரில் பட்டாசு விற்பனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஸ்டேண்டர்ட்டு, இரட்டை கிளி ஆகிய தரமுள்ள பட்டாசு நிறுவனங்களிடமிருந்து பட்டாசு கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.
பொது மக்களின் நலன் கருதி கிப்ட் பாக்ஸ் ரூ.450/- முதல் ரூ.1,865/- மதிப்பு வரை விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. மேலும் சில்லரை விற்பனையாகவும் மொத்த விற்பனை செய்யவும் தயார் நிலையில் உள்ளன. இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் திருக்கரத்தால் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். எனவே பொது மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றியும், தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையும், மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரையும், பட்டாசு வெடித்தல் தொடர்பான அறிவுரைகளை பின்பற்றி செயல்பட தீபாவளி நல்வாழ்த்துக்களுடன் கூட்டுறவுத்துறை சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அன்புடன் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராசன். துணைப்பதிவாளர் (பொது விநியோகத்திட்டம்) ராஜசேகரன், கூட்டுறவு துறை பணியாளர்கள், மேலாண்மை இயக்குநர் திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மற்றும் பண்டகசாலை பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.