கான்கிரீட் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்

மண் கால்வாயை முழுமையாக துார்வாரி, கான்கிரீட் கால்வாயாக கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாக்குப்பேட்டை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-05-15 02:13 GMT

மண் கால்வாய் 

காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி, பாக்குபேட்டையில் பிரதான சாலை ஓரத்தில் இருந்து வெள்ளக்குளம் தெரு வழியாக, மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் செல்லும் கால்வாய் உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால், இக்கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் துார்ந்துள்ளதால், கழிவுநீர் முழுமையாக வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் கொசு தொல்லை அதிகரிக்கும் நிலை இருப்பதாக அப்பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், மழைக்காலங்களில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, மண் கால்வாயை முழுமையாக துார்வாரி, கான்கிரீட் கால்வாயாக கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாக்குபேட்டை கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News