பின்னலாடை தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தல்

குஜிலியம்பாறையில் பின்னலாடை தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தல்

Update: 2023-11-27 04:35 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் குஜிலியம்பாறை ஒன்றியப் பேரவை ஞாயிறன்று பாளையத்தில் நடைபெற்றது. ஒன்றியத்தலைவர் ஜே.கே.சரவணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாவட்ட துணைச்செயலாளர் ஏ.கே.முகேஷ், முன்னாள் மாவட்டத்தலைவர் பாலசுப்ரமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 15 பேர் கொண்ட புதிய ஒன்றியக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒன்றியத் தலைவராக ரஞ்சித், செயலாளராக சண்முகவேல், பொருளாளராக சம்பத் துணைத்தலைவர்களாக ஜே.கே.சரவணன், அய்யப்பன், துணைச்செயலாளர்களாக கோகிலா, முத்துவேல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். குஜிலியம்பாறையில் தமிழ்நாடு அரசு பின்னலாடை தொழிற்சாலை தொடங்கி வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். மல்லப்புரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.


Tags:    

Similar News