சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு

சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நடக்கும் கட்டுமான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு செய்தார்.

Update: 2024-01-08 04:43 GMT

ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிங்கவரம் மலை மீது பல்லவர் கால குடவரை கோவிலான ரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கோவிலில் சேதமடைந்து கிடக்கும் சுற்றுச்சுவரை விரைந்து சீரமைப்பது மற்றும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வச திகள் செய்து கொடுப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து கோவில் அடிவார பகுதியில் பக்தர்கள் வச திக்காக ரூ.2 கோடி மதிப்பில் திருமண மண்டபம் மற்றும் உணவு அருந்துமிடம் கட்டும் பணியையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் இணை ஆணையர் சிவக்குமார், துணை ஆணையர் சிவலிங்கம், விழுப்புரம் உதவி ஆணையர் திவாகரன், மேல்மலையனூர் கோவில் உதவி ஆணையர் ஜீவானந் தம், ஆய்வாளர் சங்கீதா, மேலாளர் மணி, கோவில் மேலாளர் இளங்கீர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News