சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆய்வு
பண்ருட்டி நகராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை நகராட்சி தலைவர் ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
Update: 2024-02-19 04:51 GMT
ஆய்வு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட 8 வது வார்டு ஆதம்கான் தர்கா தெருவில் நடைபெறும் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணியினை பண்ருட்டி நகர மன்ற தலைவர் மற்றும் நகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் க. இராஜேந்திரன் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகரக் கழக அவைத் தலைவர் ராஜா, மாவட்ட பிரதிநிதி சரவணன், முன்னாள் மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு துணைத் தலைவர் சையத் காதர் மற்றும் வார்டு திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.