'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் மூலம் ஆட்சியர் ஆய்வு

ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தொடர் ஆய்வில் ஈடுபட்டார்.

Update: 2024-01-31 16:25 GMT

ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தொடர் ஆய்வில் ஈடுபட்டார். 

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்திற்குட்பட்ட ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக முதல்வர் அறிவித்த உங்களை தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா இன்று காலை முதல் தொடர் ஆய்வில் ஈடுபட்டார்.

அதன்படி மேலகுடியிருப்பு அங்கன்வாடி மையத்தினை ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு வழங்கபடும் உணவுகள் குறித்து கேட்டறிந்து, சுகாதாரமான முறையில் உணவுகள் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினார். இதனையடுத்து ஜெயங்கொண்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு மருந்து, மாத்திரைகளின் இருப்பு குறித்து கேட்டறிந்தார். மேலும் உரிய முறையில் சிகிச்சை அளிக்கபடுகிறதா என பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

இதனைதொடர்ந்து ஜெயங்கொண்டம் வேளாண் விரிவாக்க மையம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு வழங்கபடும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். இதில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News