ரயில்வே தண்டாவளங்களில் மின் கடத்தும் கம்பிகளை ஆய்வு
தென்காசி மாவட்டம் தென்னக ரயில்வே உட்பட்ட ரயில்வே தண்டவாளங்களில் மின் கடத்தும் கம்பிகளை ரயில்வே ஊழியர்கள் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.;
Update: 2024-01-23 11:55 GMT
தென்காசி மாவட்டம் தென்னக ரயில்வே உட்பட்ட ரயில்வே தண்டவாளங்களில் மின் கடத்தும் கம்பிகளை ரயில்வே ஊழியர்கள் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் தென்காசி முதல் சங்கரன்கோவில் வரை தென்னக ரயில்வே உட்பட்ட ரயில்வே தண்டவாளங்களில் தலைக்கு மேல் உள்ள உபகரணங்களான மின்சார கம்பிகளின் பழுதை over head equipment (OHP inspection Car ) எனும் பிரத்யேக கருவிகள் கொண்ட இன்ஜினில் ரயில்வே ஊழியர்கள் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ரயில் செல்லும் தண்டவாளங்களில் உள்ள மின் கம்பங்களில் உள்ள மின்சாரத்தை கடத்தும் கம்பிகளில் ஏதாவது மின் கசிவு ஏற்படுகிறதா எனவும் மேலும் மின்சார கம்பிகளில் பழுது ஏதும் ஏற்பட்டுள்ளதா என ஆய்வு செய்து தொடர்ந்து துறை சார்ந்த ரயில்வே அதிகாரிகள் ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.