அந்தியூரில் வாக்குச்சாவடி பதிவு அலுவலருக்கான பயிற்சி வகுப்பு குறித்து ஆய்வு
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிறிஸ்துராஜ் கோபி அந்தியூரில் வாக்குச்சாவடி பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
Update: 2024-04-08 09:25 GMT
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அந்தியூர், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு முகாமினை ஆய்வு செய்தார். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அந்தியூர், கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு முகாமினை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். இது குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:& திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம், காங்கேயம், அவினாசி, திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 2520 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணி மேற்கொள்வதற்காக வாக்குச்சாவடி அலுவலர்களாக மொத்தம் 12 ஆயிரத்து 579 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. அந்த வகையில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சாரதா மேல்நிலைப்பள்ளி, அந்தியூர் மங்கலம் மேல்நிலைப்பள்ளிகளில் வாக்குச்சாவடி பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இதல் கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணப்பன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தர்மராஜ், கோபிசெட்டிபாளையம் தாசில்தார் கார்த்திக், அந்தியூர் தாசில்தார் கவியரசு மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.