குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டப்பணிகளை, பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம், மாவட்ட ஆட்சியர் கற்பகம் முன்னிலையில் நேரில் ஆய்வு செய்தனர்.

Update: 2024-05-09 15:30 GMT

குடிநீர் பணிகள் ஆய்வு 

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநரும் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அனில் மேஷ்ராம், தலைமையில் , மாவட்ட ஆட்சியா கற்பகம் முன்னிலையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதில் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அசோக் நகரில் அமைந்துள்ள தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி, ஆலம்பாடியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆகியவற்றை கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றதா என்பது குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் லோகநாதன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் வீரமலை, நகராட்சி ஆணையர் ராமர், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News