வாக்குச்சாவடிகளில் அமைக்க வேண்டிய முன்னேற்பாடுகள் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் அமைக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் வாக்களிக்க வரக்கூடிய பொதுமக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய குடிநீர் மற்றும் பந்தல் அமைப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டனர்.
Update: 2024-04-04 14:11 GMT
தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது இதில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 1624 வாக்கு சாவடிகள் அமைந்துள்ளன இதில் 286 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவின் போது அமைக்க வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வாக்களிக்க வரக்கூடிய பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிப்பதற்காக பந்தல்கள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான லட்சுமிபதி வாக்குச்சாவடி அலுவலர்களுடன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குறுக்குச்சாலை, குளத்தூர், கே சண்முகபுரம், கவர்ணகிரி உள்ளிட்ட வாக்கு சாவடிகளுக்கு சென்று ஆய்வு செய்ததுடன் ஆலோசனை நடத்தினார் இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.