பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்டத்தில் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தபோட்டுள்ளது.

Update: 2024-02-06 16:08 GMT

மாவட்ட ஆட்சியர் 

திருவாரூர் மாவட்டத்தில் காப்பீடு செய்ய நிர்ணயிக்கப்பட்ட பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் ,பதிவு விண்ணப்பம் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் அல்லது விதைப்பு சான்றிதழ் ஆதார் அட்டை நகல், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகிய அவற்றை இணைத்து கட்டண தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம்.

பயிர் காப்பீட்டு தொகையில் விவசாயிகள் 1.5% மட்டும் செலுத்தினால் போதுமானது. பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் அருகில் உள்ள பொதுச் சேவை மையங்களிலோ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி நெல் தரிசில்உளுந்து, நெல் தரிசில் பச்சை பயறு பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தகவல்.

Tags:    

Similar News