கழுகுகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
முதுமலை புலிகள் காப்பகத்தில் பாறு கழுகுளை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
Update: 2024-01-01 00:59 GMT
இந்தியாவில் 9 வாகையான பாறு கழுகுகள் அல்லது பிணம் திண்ணி கழுகுகள் உள்ளன. அழிவின் பிடியில் உள்ள இந்த கழுகுகளில் 4 வகை தமிழகத்தில் முதுமலை மற்றும் சத்தியமங்கல வன பகுதிகளில் மட்டுமே காணபடுகின்றன. குறிப்பாக வெண் முதுகு கழுகு, நீண்ட அலகு கழுகு, செந்தலை கழுகுகள் உள்ள நிலையில் முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரளா மாநிலம் வயநாடு சரணாலய பகுதியில் உள்ள பாறு கழுகுகளை கணக்கெடுக்கும் பணி நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 2 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த கணக்கெடுப்பில் முதுமலையில் 28 குழுக்கள் என மொத்தம் 100 குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இக்குழுவினர் பாறு கழுகளின் எண்ணிக்கை, அவற்றின் கூடுகள் மற்றும் குஞ்சுகள் குறித்தும் அவை உணவு தேடி செல்லும் வாழ்விடம் குறித்தும் தகவல்களை சேகரித்து வருகின்றன.